டிரைவர்களுக்கு வேலை
ஐ.ஒ.சி.எல்.மார்க்கெட்டிங் டிவிஷன் பிரிவில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் (ஐ.ஒ.சி.எல்.) கிழக்கு மண்டல மார்க்கெட்டிங் டிவிஷன் பிரிவில், ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்தமான் நிகோபார் தீவு மற்றும் மணிப்பூர், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட 9 கிழக்கு இந்திய மாநிலங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பிளஸ்-2 படிப்புடன், கனரக வாகன லைசென்சு பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். www.iocrefrecruit.in என்ற இணையதளம் வழியே 10-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் நகல் விண்ணப்பம் 16-2-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.