கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து 5 பெண்கள், டிரைவர் உடல் நசுங்கி சாவு புனேயில் பரிதாபம்
புனேயில், கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 5 பெண்கள் மற்றும் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனே,

ரிசாட் ஊழியர்கள்
புனே லோனவாலா பகுதியில் உள்ள ரிசாட்டில் (உல்லாச விடுதி) பணிபுரிந்து வந்த பெண் ஊழியர்கள் 6 பேர் நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை டிரைவர் சோயிப் முகமது என்பவர் ஓட்டினார். இவர்கள் சென்ற கார் கண்டலா போலீஸ் பயிற்சி மையம் அருகே வந்து கொண்டு இருந்தது.
அப்போது, புனேயில் இருந்து லோனவாலா நோக்கி சென்று கொண்டு இருந்த லாரி ஒன்று திடீரென அவர்களது கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
5 பேர் பலி
இதில், காரின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் சோயிப் முகமது, பெண் ஊழியர்கள் பூஜா(வயது23), திரிஷாலா(21), சவீதா(26), சோவியத்(21), ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மோனிகா, ரீமா ஆகிய 2 பெண்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரின் உள்ளே சிக்கியிருந்த 2 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒருவர் சாவு
மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் நேற்று முன்தினம் இரவு மும்பை- புனே பழைய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களில் ரீமா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மோனிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.