‘எங்கள் சொந்த வீட்டிலேயே பா.ஜனதா எங்களை மிஞ்ச பார்க்கிறது’ அவுரங்காபாத்தில், உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு
“பா.ஜனதாவுக்கு ஏராளமான உதவிகள் செய்தோம், ஆனால் எங்கள் சொந்த வீட்டிலேயே எங்களை மிஞ்ச பார்க்கிறார்கள்” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மும்பை,

உத்தவ் தாக்கரே
அவுரங்காபாத்தின் பைதான் பகுதியில் சிவசேனா சார்பில் நேற்று விவசாயிகள் பேரணி நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது:- நாட்டில் பாரதீய ஜனதாவும், மராட்டியத்தில் சிவசேனாவும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு 25 ஆண்டுகளாக கூட்டணி நீடித்தது. மேலும், இந்துக்களின் வாக்குகள் சிதறுவதை நாங்கள் விரும்பவில்லை.
நாங்கள் பா.ஜனதாவுக்கு எப்போதுமே உதவிகரமாக இருந்தோம். ஆனால், இப்போது எங்களுடைய சொந்த வீட்டிலேயே எங்களை அவர்கள் மிஞ்ச பார்க்கிறார்கள். யார் வெற்று பெறுகிறார்கள், யார் தோற்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு சொல்லட்டும்.
வரும்காலத்தில் நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தனித்து களமிறங்கும். வெற்றி பெறும்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரசுக்கு கண்டனம்
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்த அவர், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வகித்த போது, விவசாயிகளை அவர்கள் புறக்கணித்தார்கள். இப்போது, போராட்டங்களை நடத்தி தங்களை ஜாம்பவான்களாக முன்னிலைப்படுத்துகிறார்கள்” என்றார்.