மகதாயி பிரச்சனை பற்றி மோடி வாய் திறக்காதது ஏன்? பரமேஸ்வர் கேள்வி
மகதாயி பிரச்சினை பற்றி மோடி வாய் திறக்காதது ஏன்? என்று பரமேஸ்வர் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு,
மகதாயி பிரச்சினை பற்றி மோடி வாய் திறக்காதது ஏன்? என்று பரமேஸ்வர் கேள்வி எழுப்பினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
10 சதவீத ‘கமிஷன்‘
பெங்களூருவில் நடைபெற்ற பா.ஜனதா பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் ஒரு மணி நேரம் உரையாற்றி இருக்கிறார். எங்கள் காங்கிரஸ் அரசு மீது சில குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். காங்கிரஸ் இல்லாத, ஊழல் இல்லாத கர்நாடகத்தை உருவாக்குவதாக அவர் சொல்கிறார்.
முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களை மோடி மறந்துவிட்டார். ஊழல் புகாரில் சிறைக்கு சென்று வந்தவர்களை அருகில் அமர வைத்துக்கொண்டு ஊழல் இல்லாத கர்நாடகத்தை உருவாக்குவதாக மோடி கூறுவது சரியா?. எங்கள் அரசு 10 சதவீத ‘கமிஷன்‘ பெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அவரிடம் ஆதாரங்கள் இருக்கிறதா?. நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் அவர் குத்துமதிப்பாக குற்றம்சாட்டுவது சரியல்ல.
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம்
இரும்பு மேம்பால திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது அதில் ஊழல் நடந்ததாக கூறுவது நியாயமா?. மோடிக்கு அவருடைய கட்சியினர் தவறான தகவலை கொடுத்துள்ளனர். கர்நாடக மக்கள் கஷ்டத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை.
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக மோடி சொல்கிறார். அதில் மத்திய–மாநில அரசுகளின் பங்கு தலா 20 சதவீதம். மீதமுள்ள தொகை வேறு ஆதாரங்கள் மூலம் திரட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கு எல்லா நிதியையும் மத்திய அரசே கொடுப்பது போல் பேசவது சரியல்ல. தவறான தகவலை வெளியிட்டு மாநில மக்களை திசை திருப்ப மோடி முயற்சி செய்கிறார்.
வாய் திறக்காதது ஏன்?
மகதாயி நதி நீர் பிரச்சினை பற்றி மோடி வாய் திறக்காதது ஏன்?. வட கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் பெற்றுத்தர மோடியால் முடியவில்லை. இதற்காக மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவருக்கு விவசாயிகள் மீது எப்படி அக்கறை இருக்கிறது என்று சொல்ல முடியும்?.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.