பிரதமர் நரேந்திர மோடியை முற்றுகையிட முயற்சி: வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினர் கைது
பிரதமர் நரேந்திர மோடியை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பை சேர்ந்த ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் நடந்த பரிவர்த்தனா யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடியை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பை சேர்ந்த ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பரிவர்த்தனா யாத்திரை நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் எனக்கோரி பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் முழுஅடைப்பு போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், மகதாயி பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார்.
‘அமைதி கர்நாடகம்’ பெயரில் போராட்டம்
அதன்படி, நேற்று சுதந்திர பூங்காவில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள், மகதாயி போராட்ட குழுவை சேர்ந்த விவசாயிகள் என ஏராளமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டைகள் அணிந்திருந்தனர். பலர் தங்களின் கைகளில் கருப்பு துணி, கருப்பு பட்டைகள் கட்டியிருந்தனர். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா.கோவிந்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தின்போது வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:–
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மகதாயி பிரச்சினை குறித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கும்படி மத்திய மந்திரி அனந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், பிரதமரை சந்திக்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. மகதாயி பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் கலைத்து அவருடைய நிலைப்பாட்டை இன்று(அதாவது நேற்று) கூற வேண்டும். கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் மாநில நலனை காப்பதில் தோல்வி அடைந்துள்ளனர். மகதாயி பிரச்சினையை நரேந்திர மோடி தீர்க்காவிட்டால் புதிய முறையில் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும். அந்த போராட்டத்தின்போது பஸ்கள் ஓடாது. கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும். இந்த போராட்டமானது ‘அமைதி கர்நாடகம்‘ என்ற பெயரில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது
இதற்கிடையே, பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் மத்திய பட்ஜெட், கர்நாடக அரசின் ஊழல்கள் குறித்து மட்டும் பேசினார். ஆனால், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இதனால் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டக்காரர்கள் சுதந்திர பூங்காவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை முற்றுகையிட புறப்பட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, தள்ளு–முள்ளும் நடந்தது.
இதையடுத்து, போலீசார் வாட்டாள் நாகராஜ், சாரா.கோவிந்த் உள்பட கன்னட அமைப்பை சேர்ந்த 100–க்கும் அதிகமானவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் நேற்று சுதந்திர பூங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
‘பக்கோடா‘ விற்ற கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தான் கலந்து கொண்ட ஒரு டி.வி. நிகழ்ச்சியில் வேலை இல்லா திண்டாட்டம் குறித்து பேசுகையில், ‘பக்கோடா’ விற்றாலே ஒரு நாளைக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் பா.ஜனதா அலுவலகங்களின் முன்பு திரண்டு ‘பக்கோடா’ தயாரித்து விற்பனை செய்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
இதேபோல், நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெறும் அரண்மனை மைதானத்தின் அருகே உள்ள மேக்ரி சர்க்கிளில் திரண்ட 10 கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் போல் உடை அணிந்து ‘பக்கோடா’ பாக்கெட்டுகளை கையில் ஏந்தி ‘மோடி பக்கோடா‘, ‘அமித்ஷா பக்கோடா‘, ‘எடி(எடியூரப்பா) பக்கோடா‘, என கூவி விற்பனை செய்து தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த ‘பக்கோடாக்களை’ பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த பா.ஜனதா கட்சியினரே வாங்கி சுவைத்தனர். இதையடுத்து அவர்கள் 10 பேரையும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.