சாத்தம்பாடியில் மருத்துவ முகாம்; அரியலூர் கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2018-02-04 22:30 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ரத்த பரிசோதனை மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறப்பு கண் சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, குழந்தை மருத்துவம், எச்.ஐ.வி. பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. முகாமை மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், முகாமில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களில் இரத்த சோகை, இரும்புசத்துகள் குறைவாக உள்ள கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாத வகையில், இரும்பு சத்துள்ள மாத்திரைகள் மற்றும் உட்கொள்வதற்கான உணவு வகைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் 102 பேர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தா.பழூர் வட்டார மருத்துவ அலுவலர் தட்சணாமூர்த்தி, செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்