ஜல்லிக்கட்டு: காளை உதைத்து தள்ளியதில் மாடுபிடி வீரர் பலி 19 பேர் காயம்
மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை உதைத்து தள்ளியதில் மாடுபிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் தாரை, தப்பட்டையுடன் வாடிவாசலை நோக்கி கோவில் காளை மற்றும் ஊர் காளையை அழைத்துக்கொண்டு, வேட்டிகளை எடுத்து வந்தனர். மேலும் இளைஞர்கள் கையில் கரும்புகளை ஏந்திக்கொண்டு ஆடிப்பாடி வந்தனர்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் முதல் காளையாக மேலமஞ்சம்பட்டி கோவில் காளையும், அதைத்தொடர்ந்து செவலூர் மணிக்கவுண்டர் காளையும் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து உள்ளூர் காளைகளும், தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் பிடிக்க வந்த மாடுபிடி வீரர்களை பந்தாடின. ஆக்ரோஷமாக வந்த சில காளைகள் வீரர்களை நெருங்கவிடவில்லை. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, பாத்திரங்கள், சைக்கிள், ஆட்டுக்குட்டி, நாட்டுக்கோழி, தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தென்னங்கன்றும் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்து வரப்பட்டிருந்த 676 காளைகளில் 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் நேரமின்மை காரணமாக 12 காளைகளை அவிழ்த்து விட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மொத்தம் 659 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதே போல் 326 மாடுபிடி வீரர்களில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 314 பேர் களத்தில் இறங்கினர். மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு குழுக்களாக இறக்கி விடப்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் மற்றும் காலால் உதைத்ததில் 9 மாடுபிடி வீரர்கள், 6 பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் 4 பேர் என மொத்தம் 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே இரண்டாவது குழுவில் களமிறங்கிய சிதம்பரத்தான்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 25) என்ற மாடுபிடி வீரர் காளையை அடக்க முயன்றபோது, அவருடைய மார்பு பகுதியில் காளை காலால் உதைத்து தள்ளியது. இதில் மார்பு பகுதி முழுவதுமாக வீங்கியதால் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
போட்டியை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஷ் கல்யாண், மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஜல்லிக்கட்டு முறைப்படி நடைபெறுகிறதா என தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ரத்தினவேல் எம்.பி., மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு, மணப்பாறை எம்.எல்.ஏ. ஆர்.சந்திரசேகர் ஆகியோர் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.