எங்கள் அரசை குறைகூற ரங்கசாமிக்கு அருகதை இல்லை - நாராயணசாமி ஆவேசம்
எங்கள் அரசை குறைகூற ரங்கசாமிக்கு அருகதை இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ரங்கசாமி, புதுவையில் ஆட்சி நடக்கவில்லை, மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவருக்கு ஞாபகமறதி அதிகம். அவர் புதுவையில் 12 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்தார். அரசு சார்பு நிறுவனங்களில் கொல்லைப்புறமாக ஆட்களை நியமித்து அவற்றை நலிவுற செய்தார்.
அதை சரிசெய்ய அதிகாரிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவரது ஆட்சிக்காலத்தில் முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் 8 மாதங்கள் கழித்து கொடுக்கப்பட்டது. நாங்கள் உரிய காலத்தில் கொடுத்து வருகிறோம். இலவச அரிசி வழங்குவது நிர்வாக சிக்கலால் காலதாமதமானது. நாங்கள் ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மற்றொரு துறைக்கு மாற்றவில்லை. ஆனால் அவர்கள் பொதுத்துறைகளின் நிதியை எடுத்து தேவையில்லாத திட்டங்களுக்கு மாற்றினார்.
மிக்சி, கிரைண்டர் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்காக அரசுப்பணம் ரூ.120 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரது ஆட்சியில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. நிர்வாக சீர்கேடு நடந்தது.
மத்திய அரசின் திட்டங்களை புதுவைக்கு கொண்டுவர முட்டுக்கட்டையாக இருந்தார். குறிப்பாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வழங்கப்பட்ட ரூ.10 கோடியை செலவிடாமல் கிடப்பில் போட்டார். மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவில்லை. எல்லா திட்டங்களையும் அவர் தடுத்தார். மத்திய அரசின் நிதி மூலம் 2 மேம்பாலம் கட்டுவதையும் அவர் நிறுத்தினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் அவற்றை மீண்டும் கையில் எடுத்து அதில் ஒரு பாலம் திறக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில நிர்வாகத்தை குட்டிச்சுவராக்கியவர் ரங்கசாமி. அவருக்கு எங்கள் அரசைப்பற்றி குறைகூற அவருக்கு அருகதை இல்லை. மற்ற கட்சியினர் வேண்டுமானால் குறை சொல்லலாம். இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்காக மத்திய அரசிடமிருந்து முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதி வந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.527 கோடி பெற உள்ளோம்.
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.30 கோடி கொடுத்துள்ளோம். அவரது ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட அரிசிக்கான நிதி, கோவில் குடமுழுக்கு தொகை, பொதுப்பணித்துறை காண்டிராக்டர்களுக்கான பாக்கி ஆகியவற்றை கொடுத்துள்ளோம். மேலும் இவரது ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடனுக்கான அசலை நாங்கள் செலுத்துகிறோம். எனவே எங்கள் ஆட்சியைப்பற்றி குறைகூற ரங்கசாமிக்கு தகுதியில்லை. ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்தியவர் அவர்.
புதுவையில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டுகளை இழந்தனர். எனவே பாரதீய ஜனதா தலைவர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆட்சிமாற்ற வேலையெல்லாம் இங்கு நடக்காது. அதை அவர் வேறு எங்காவது வைத்துக்கொள்ளட்டும்.
அதேநேரத்தில் ரங்கசாமியும் பகல் கனவு காண்கிறார். அவரது நிர்வாக திறமையின்மையினால்தான் வளர்ச்சி குன்றியது. மத்திய அரசோடு இணக்கமாக செல்ல வேண்டும் என்கிறார். இவர் முதல்-அமைச்சராக இருந்தபோது எப்படி செயல்பட்டார்? நிதி கேட்டு டெல்லி சென்றதுண்டா? அவர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் வேலையை செய்யட்டும். அவர் முதல்-அமைச்சராக இருந்தால்தான் சட்டசபைக்கே வருவார்.
தொகுதி மக்களுக்கான வேலையை அவர் பார்ப்பது கிடையாது. 12 வருடம் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது கனகனேரியில் அவர் படகு விடவில்லை. நாங்கள் படகுவிடும்போது முன்னே சென்று நிற்கிறார். அவருடன் நிர்வாகம் தொடர்பாக நான் நேரடி விவாதத்துக்கு தயாராக உள்ளேன்.
வருகிற புதன்கிழமை இந்திராநகர், கதிர்காமம், அரியாங்குப்பம் தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவது தொடர்பான கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தில் ரங்கசாமி கலந்துகொண்டால்கூட நன்றாக இருக்கும். புதுவைக்கு பிரதமர் மோடி வரும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.