சாலையோரம் மீன் விற்க அனுமதி மறுப்பு: மீனவர்கள் திடீர் போராட்டம்
சாலையோரம் மீன் விற்பனை செய்வதற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
புதுச்சேரி,
புதுவை உப்பளம் அம்பேத்கர் சாலையில் ஆங்காங்கே மீனவர்கள் மற்றும் பெண்கள் மீன் விற்பனை செய்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வழியாக கவர்னர் சென்றபோது ரோட்டில் மீன் விற்பவர்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டனர். சில நாட்கள் மட்டும் அவர்கள் அங்கு மீன் விற்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் மீண்டும் துறைமுகத்தின் வெளியே ரோட்டில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக அரசுக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அங்கு மீன் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று மீன் வியாபாரம் செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் திடீர் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது மீன் விற்பனை செய்வதற்கு வேறு இடம் ஒதுக்கித்தரப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில் மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் தற்போது கையிருப்பில் உள்ள மீன்களை அங்கேயே வைத்து விற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து அவற்றை விற்பனை செய்தனர்.