உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்காது என்று அதிகாரிகள் திடீர் அறிவிப்பு, விவசாயிகள் மறியல்
ஏலத்தில் கலந்து கொள்ள வியாபாரிகள் மறுத்ததால் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்காது என்று அதிகாரிகள் திடீரென அறிவித்தனர். இதனால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இந்த விற்பனைக்கூடத்திற்கு உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விளைந்த நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். அந்த பொருட்களை அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் வாங்கிச்செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல், உளுந்து உள்ளிட்ட பொருட்களின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரியும், மாற்றுச்சாக்கு வழங்கக்கோரியும், உடனடியாக பணப்பட்டுவாடா செய்யக்கோரியும் விவசாயிகள் அடிக்கடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இதற்கு வியாபாரிகள் தான் காரணம் என்றும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும், விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல் மற்றும் உளுந்து பயிர்களை சேமித்து வைக்க விற்பனைக்கூடத்தில் போதிய இடவசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பொருட்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்று வியாபாரிகள் அறிவித்தனர். மேலும் இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் முகமது கனி நேற்று மதியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக தானியங்களை வாங்குவதற்காக வியாபாரிகள் வரும் வரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்காது. மீண்டும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இன்று(திங்கட்கிழமை) விற்பனை செய்வதற்காக நேற்று காலையில் இருந்தே ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நெல், உளுந்து உள்ளிட்ட பொருட்களுடன் விவசாயிகள் காத்திருந்தனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.
பின்னர் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், 2 நாட்களாக பொருட்களுடன் காத்திருக்கிறோம். தற்போது திடீரென ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்காது, நெல், உளுந்து உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்யமாட்டோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை என்ன செய்வது, வீட்டிற்கு கொண்டு சென்றால் மேலும் கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.