‘கரும்பு நிலுவைத்தொகை வழங்காமல் சர்க்கரை ஆலைகள் ஏமாற்றுகின்றன’ கலெக்டரிடம், விவசாயிகள் புகார்
கரும்பு நிலுவைத்தொகை வழங்காமல் சர்க்கரை ஆலைகள் ஏமாற்றுகின்றன என்று கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் குண்டுரெட்டியார், தமிழரசன், ஏழுமலை உள்ளிட்ட விவசாயிகள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், கரும்பு விவசாயிகளுக்கு அரசு பரிந்துரை செய்த விலையை கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டு வரை டன் ஒன்றுக்கு ஆண்டு வாரியாக ரூ.250, ரூ.300, ரூ.450, ரூ.375 என வழங்க அரசு அறிவித்தது. ஆனால் 4 ஆண்டுகளாக தனியார் ஆலைகள் இந்த விலையை வழங்காமல் உள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தியது. அப்போது 2 ஆண்டுகள் மட்டுமே லாபம் வந்ததாக ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். லாபம் வந்த 2 ஆண்டுகளுக்காவது நிலுவைத்தொகையை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் அறிவித்த நிலையில் ஆலை உரிமையாளர்கள் கலந்துபேசி முடிவு சொல்வதாக தெரிவித்தனர்.இந்நிலையில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், ஆண்டுக்கு ரூ.40 மட்டுமே உயர்த்தி தருவதென முடிவு செய்து அவர்களாகவே ஒரு ஒப்பந்தத்தை அச்சிட்டு விவசாயிகளை ஏமாற்றி எழுதி வாங்கி வருகின்றனர். இந்த நிலுவைத்தொகை தொடர்பாக முத்தரப்பு கூட்டத்தில் எந்த ஒப்பந்தமும் போடாத நிலையில் அரசு அறிவித்த ஆதார விலையைத்தான் தர வேண்டும் என்ற நிலை உள்ளன.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், விவசாயிகளை ஏமாற்றும் விதத்தில் ஒரு போலியான ஒப்பந்தத்தை கொடுத்து கையெழுத்து வாங்குவது சட்டவிரோதமாகும். இதை தடுத்து நிறுத்துவதோடு, நிலுவைத்தொகையை வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.