அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்களிடம் பணம் கேட்டு கைக்குழந்தையுடன் பெண்கள் தொந்தரவு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு பக்தர்களிடம் பணம் கேட்டு கைக்குழந்தையுடன் பெண்கள் தொந்தரவு செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
திருவண்ணாமலை,
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள மலையே சிவனாக கருதப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
இக்கோவில் சிறந்த கட்டிடக்கலைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது. இதனால் ஆன்மிகத்திற்காகவும், கட்டிட கலையை கண்டு வியக்கவும் அதிக அளவிலான வெளிநாட்டு பயணிகளும் திருவண்ணாமலைக்கு வருவது அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் பிச்சை எடுப்பவர்களும் இங்கு அதிகமாக காணப்படுகிறார்கள். ஊனம், முதியவர்கள் தங்களது இயலாமையினால் பிச்சை எடுப்பது ஒரு புறம் இருக்க, ஒரு சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுத்தல் என்ற போர்வையில் பக்தர்களை மறித்து அடாவடியாக பணம் பறித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.
ராஜகோபுரம் முன்பு சில பெண்கள் கைக்குழந்தையுடன் அவர்களை மறித்து ‘பிச்சை போடுங்கள்’ என்று கேட்டனர். சில பக்தர்கள் சில்லரை இல்லை என்று கூறி நகர முயற்சித்த போது அந்த பெண்கள் அவர்களின் கையை பிடித்து பணம் தந்து விட்டு தான் போக வேண்டும் என்று அடாவடி செய்தனர். இதனால் சில பக்தர்கள் தர்மசங்கடத்திற்குள்ளாகினர்.
இது குறித்து புகார் அளிப்பதற்காக பலர் தங்களது செல்போனில் அவர்களை படம் எடுக்க முயன்றனர். இதைப் பார்த்ததும் அந்த பெண்கள் தங்களது கையில் வைத்திருந்த குழந்தையை சேலையால் மூடியவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு வந்தபோது சில பெண்கள் கையில் குழந்தையுடன் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். எங்களுடன் வந்தவர்கள் இரக்கப்பட்டு ரூபாய் நாணயங்கள் கொடுத்தனர். சிலர் தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்தனர்.
எனினும் அவர்கள் எங்களை விடாமல் கையை பிடித்து பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். செல்போனில் அவர்களை புகைப்படம் எடுத்தபோது அவர்கள் குழந்தையை மூடியவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
குழந்தை உண்மையில் அவர்கள் குழந்தையா என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.