கார் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி

மாமல்லபுரம் அருகே கார் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலியானார்.

Update: 2018-02-04 21:45 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை என்ற இடத்தில் நேற்று முன்தினம் சென்னையை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் காத்தான் கடையை சேர்ந்த அடையாளச்சேரி முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் (வயது 55) தனது நண்பர் மேக்காவன் (45) என்பவருடன் வந்து கொண்டிருந்தனர்.

இதில் கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மேக்காவன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்