திருச்செந்தூரில் துணிகரம் ஒரே நாள் இரவில் வீடு– ஜவுளிக்கடையில் திருட்டு
திருச்செந்தூரில் ஒரே நாள் இரவில் வீடு–ஜவுளிக்கடையில் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்தவர் ரகு (வயது 47). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலா. இவர்களுக்கு அவினாஷ், சந்திரேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவினாஷ், கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியிலும், சந்திரேஷ் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் கலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே ரகு தன்னுடைய மனைவியை சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ரகுவின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
நேற்று அதிகாலையில் ரகு தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோன்று திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிச் சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் ஜவுளிக்கடையின் முன்பக்க ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.2 ஆயிரத்து 500–ஐ மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், ஜவுளிக்கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்செந்தூரில் ஒரே நாள் இரவில் வீடு, ஜவுளிக்கடையில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.