பயணத்தில் பாதுகாக்கும் ‘தோழன்’
பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கு பயன் தரும் வகையில் செல்போனில் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள், இரு தோழிகள்.
அகமதாபாத்தை சேர்ந்த பூஜா கெம்ஹா, பிரீத்தி அகர்வால் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த அப்ளிகேஷன் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் பேருந்தை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
காலையில் பேருந்து எந்த பகுதியில் வந்து கொண்டிருக்கிறது? எந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது? போக்குவரத்து நெரிசல் எதுவும் இருக்கிறதா? எவ்வளவு நேரத்தில் பள்ளியை சென்றடையும்? மாலையில் குழந்தைகள் பேருந்தில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு விட்டார்களா? எவ்வளவு நேரத்தில் வருவார்கள்? வருவதற்கு தாமதமானால் அதற்கு என்ன காரணம்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த அப்ளிகேஷன் விடை கொடுக்கும் என்பது சிறப்பம்சம்.
பூஜா தன்னுடைய குழந்தையை பள்ளி பேருந்தில் அனுப்புவது வழக்கம். மாலையில் அந்த பேருந்து குறிப்பிட்ட இடத்தில் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு செல்லும். அன்று வழக்கமாக இறக்கிவிடப்படும் இடத்திற்கு செல்ல பூஜாவுக்கு காலதாமதமாகி விட்டது. அதனால் குழந்தை பேருந்தில் இருந்து இறங்கியதா? பேருந்திலேயே இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் பரிதவித்திருக்கிறார். அதன் தாக்கமே அப்ளிகேஷன் உருவாக மூல காரணமாக இருந்திருக்கிறது.
‘‘நான் என் குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு தோழியுடன் கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சுற்றித்திரிந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வழக்கமாக குழந்தை பேருந்தில் இருந்து இறங்கும் இடத்திற்கு முன்கூட்டியே புறப்பட்டு செல்வதற்காக செல்போனில் அலாரம் வைத்திருப்பேன். அன்று அலாரம் ஒலித்தபோதுதான் குழந்தையை அழைக்க செல்லும் நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். பதறிபோய் வேகமாக புறப்பட்டு வந்தேன். 20 நிமிடங்கள் இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் காரணமாக என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் குழந்தை இறங்கும் இடத்திற்கு செல்லமுடியவில்லை.
சிரமப்பட்டு அந்த இடத்தை அடைந்தபோது அங்கு குழந்தை இல்லை. குழந்தையை பேருந்தில் இருந்து இறக்கினார்களா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள செல்போனில் பள்ளி மேலாளரை தொடர்பு கொண்டேன். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. பேருந்து எந்த பாதை வழியாக செல்லும் என்பது எனக்கு தெரியாது. விசாரித்தபோதுதான், நாங்கள் கண்காட்சிக்கு சென்றிருந்த இடத்தின் வழியாகத்தான் வழக்கமாக பேருந்து செல்லும் என்பது தெரியவந்தது. இது முன்கூட்டியே எனக்கு தெரிந்திருந்தால் பதற்றப் படாமல் அங்கேயே பேருந்தை நிறுத்தி, குழந்தையை என்னுடன் அழைத்து வந்திருப்பேன். பேருந்தில் குழந்தை பள்ளிக்கூடத்திற்கே திரும்பி சென்றது தெரியவந்தது. அங்கு சென்று குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தேன்’’ என்கிறார்.
இந்த சம்பவம் பூஜா மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. பள்ளி பேருந்தை கண் காணித்து குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் தனது தோழிகளோடு ஆலோசித்து அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்.
‘‘பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகள் இருந்தால் எளிதாக இருப்பிடத்தை அறியலாம் என்பதால் செல்போன் உதவியுடன் அத்தகைய அப்ளிகேஷனை உருவாக்க திட்டமிட்டோம். பெற்றோர், பேருந்து ஓட்டுநர், பள்ளி நிர்வாகத்தினர் ஆகிய மூவரையும் ஒருங் கிணைக்கும் வகையில் வடிவமைத்தோம். இதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தை களின் பேருந்து செல்லும் பாதையை கண்காணிக்க முடியும். பேருந்து எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்பதால் பதற்றமின்றி செயல்படலாம். பேருந்தை எதிர்பார்த்து பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுமில்லை. இந்த அப்ளிகேஷனின் பயன்பாட்டுக்கு பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு அவசியமானது. தற்போது பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது. அதனால் எங்கள் திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏராளமான பள்ளிகள் எங்கள் அப்ளிகேஷன் மூலம் இணைந்துள்ளன’’ என்கிறார், பூஜா.