ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு தொடங்கியது இளைஞர்கள் குவிந்தனர்

புதுவையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.;

Update: 2018-02-03 22:24 GMT
புதுச்சேரி,

இந்திய ராணுவத்தில் படைவீரர், தொழில்நுட்ப பிரிவு, நர்சிங் உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. முகாமில் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுச்சேரி உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முகாமில் கலந்துகொள்வதற்கு ஆன்லைன் மூலம் இளைஞர்கள் பதிவு செய்தனர். அதன்படி ஆள்சேர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் நேற்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு முதல்கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின் அவர்களது உயரம், எடை, மார்பளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடல் தகுதி தேர்வு நடந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேலூர், விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கான சோதனைகள் நடைபெறுகின்றன. வருகிற 8-ந்தேதி புதுச்சேரி இளைஞர்களுக்கான தேர்வு நடக்கிறது.

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடப்பதையொட்டி புதுவை உப்பளம் மைதானம் முழுவதும் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. முகாமில் கலந்துகொள்ள வெளியூர்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் புதுச்சேரி வந்துள்ளனர்.

அவர்கள் ரெயில்நிலையம், கடற்கரை மற்றும் மைதானத்தை சுற்றியுள்ள பிளாட்பார பகுதிகளில் தங்கியுள்ளனர். இதையொட்டி ஆள்தேர்வு முகாம் நடைபெறும் மைதான பகுதியில் திடீர் கடைகள் முளைத்தன.

மேலும் செய்திகள்