காரில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர் கைது

புதுச்சேரியில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-03 22:03 GMT
புதுச்சேரி

இந்த கடத்தலுக்கு உடந்தையாக போலீஸ்காரர் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

மரக்காணம் அருகே அனிச்சங்குப்பம் கிழக்கு கடற்கரைசாலை சோதனைச் சாவடியில் நேற்று அங்குள்ள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இது குறித்து சோதனைச் சாவடி போலீசார் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த மரக்காணம் போலீசார் அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் அந்தக் காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் பல அட்டை பெட்டிக்களில் 1488 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தலுக்கு ஒரு போலீஸ்காரரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே பாலூர் ஜல்லிமேட்டுப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 44) என்பரை கைது செய்தனர். இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்க்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மது பாட்டில்கள் யாருக்கு செல்கிறது? இந்த காரின் உரிமையாளர் யார்? புதுவையில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதற்கு மரக்காணம் அருகே தாழங்காடு சோதனைச் சாவடியில் உள்ள ஒரு சோதனைச் சாவடி காவலரும் உடந்தையா என்ற கோணத்தில் கைது செயயப்பட்ட கார் டிரைவரிடம் தீவிர விசாரனை நடத்தினார்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்த விசாரணையில் மதுபான கடத்தலில் ஈடுபட்டவருக்கும் தாழங்காடு சோதனைச் சாவடியில் பணிபுரியும் காவலர் குணசேகரனும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அந்த காவலர் மீது துறை றீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்