மகளை ஏரியில் தள்ளி கொன்று விட்டு கணவன்- மனைவி தற்கொலை நாக்பூரில் சோகம்
மகளை ஏரியில் தள்ளி கொலை செய்து விட்டு கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாக்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
நாக்பூர்,

ஏரியில் பிணம்
நாக்பூர் ராம்நகரை அடுத்த தேலன்காடி பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் ஷிண்டே (வயது 35). இவரது மனைவி ரூபாளி (32). இந்த தம்பதிக்கு 5 வயதில் ரூஹி என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில், நேற்று காலை 3 பேரும் பதாலா ஏரியில் பிணமாக மிதந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, ஏரியில் இறங்கி 3 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோகம்
அதிகாலை 4 மணியளவில் சிறுமி ரூஹியை ஏரியில் தள்ளி கொன்று விட்டு, கணவன்- மனைவி இருவரும் அதே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும், அவர்களது இந்த விபரீத முடிவுக்கான காரணம் தெரியவரவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகளை ஏரியில் தள்ளி கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.