மிராபயந்தரில் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைப்பு 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
மிராபயந்தரில் காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வசாய்,

காங்கிரஸ் கவுன்சிலர்
தானே மாவட்டம் மிராபயந்தர் மாநகராட்சியின் 22-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருப்பவர் சுபேர் இனாம்தார். இவர் நயாநகரில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
சுபேர் இனாம்தாரின் மூத்த மகள் வக்கீலாக உள்ளார். இரண்டாவது மகள் எம்.பி.ஏ. பட்டதாரி. மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், உறவினர் வீட்டு துக்கநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் சுபேர் இனாம்தார் ரத்னகிரி சென்றிருந்தார். அவரது மகள்கள் இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
தீ வைப்பு
நேற்று இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3.15 மணியளவில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் தான் பேண்டு பாக்கெட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து சுபேர் இனாம்தாரின் வீட்டு கதவு மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். பின்னர் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
கவுன்சிலர் சுபேர் இனாம்தாரின் வீட்டு கதவு தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ வீட்டிற்குள் பரவவில்லை.
இதன்பின்னர் தான் தங்கள் வீட்டு கதவு மர்மஆசாமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது சுபேர் இனாம்தாரின் மகள்கள் இருவருக்கும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதனால் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சம்பவம் குறித்து உடனடியாக சுபேர் இனாம்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ரத்னகிரியில் இருந்து மதியம் வீடு திரும்பினார். பின்னர் சம்பவம் குறித்து நயாநகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கவுன்சிலரின் வீட்டு கதவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்த வாலிபர்கள் இரண்டு பேரின் முகமும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் மூலம் போலீசார் அவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நயாநகர் பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கவுன்சிலர் சுபேர் இனாம்தார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஆசாமிகள் தான் அவரது வீட்டுக்கு தீ வைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. கவுன்சிலர் வீட்டுக்கு மர்மஆசாமிகள் தீ வைத்த சம்பவம் மிராபயந்தரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.