அண்ணா சிலைக்கு தலைவர்கள் மரியாதை மாலை அணிவித்தனர்
அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி,
அண்ணாவின் நினைவுநாள் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவையில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.வினர் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் கணேசன், பன்னீர்செல்வம், ரவீந்திரன், அன்பானந்தம், பாப்புசாமி, நாகமணி, கலியபெருமாள், பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் காசிலிங்கம், வெங்கடசாமி, முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, நிர்வாகிகள் திருநாவுக்கரசு, கோவிந்தம்மாள், வக்கீல் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அண்ணா சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காக்காயந்தோப்பில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் அண்ணாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமரன், சரவணன், ஆறுமுகம், சகாயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
டி.டி.வி. தினகரன் அணியினர் சுத்துக்கேணி பாஸ்கர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சேகர், தமிழ்செல்வன், ஆனந்தன், சுப்ரமணியன், இளங்கோவன், சிங்காரவேலன், செந்தில், கதிரவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் வக்கீல் வேல்முருகன் தலைமையில் மூர்த்தி, பாண்டுரங்கன், செந்தில்முருகன், முருகன், வீரப்பன் உள்பட பலர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தெற்கு மாநில தி.மு.க.வினர் அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி நிர்வாகிகள் தைரியநாதன், சக்திவேல், மாறன், வேலவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, நிர்வாகிகள் கலியபெருமாள், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கிருமாம்பாக்கத்தில் ஏம்பலம் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விஜயன், கோவிந்தராஜ், ராஜாராம், சுப்பையா, இளம்பருதி, சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய நீதிக்கட்சியினர் தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும், திராவிடர் கழகத்தினர் தலைவர் சிவ.வீரமணி தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.