கர்நாடக பட்ஜெட் தொடர்பாக முதல்-மந்திரி கூட்டிய கூட்டத்தில் தலித் தலைவர்கள் வெளிநடப்பு சித்தராமையாவை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு
கர்நாடக பட்ஜெட் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா கூட்டிய கூட்டத்தில் தலித் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக பட்ஜெட் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா கூட்டிய கூட்டத்தில் தலித் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் சித்தராமையாவை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு உண்டானது.
தலித் அமைப்புகளின்...
கர்நாடக பட்ஜெட் வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்காக பல்வேறு தரப்பினர், அமைப்புகளின் நிர்வாகிகளுடன் சித்தராமையா கலந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சித்தராமையா நேற்று காலை விதான சவுதாவில் தலித் அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் தொடங்கியதும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாரச்சந்திரா முனியப்பா, தலித் சங்கர்ஷ சமிதி தலைவர் மூர்த்தி ஆகியோர் பேசுகையில், “தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிபதி சதாசிவா ஆணையம் வழங்கிய அறிக்கையை அமல்படுத்துவதில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை முதலில் தெரிவிக்க வேண்டும்“ என்றனர்.
இருக்கைக்கு செல்ல மறுப்பு
மேலும் அவர்கள் சித்தராமையாவை சூழ்ந்து கொண்டு பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருக்கையில் போய் அமருங்கள் என்று சித்தராமையா கேட்டுக் கொண்டார். ஆயினும் அவர்கள் இருக்கைக்கு செல்ல மறுத்துவிட்டனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த முதல்-மந்திரி, இந்த கூட்டத்தை விட்டு வெளியேறுவதாக கூறினார். ஆனால் அந்த தலித் தலைவர்கள் சித்தராமையா கூட்டிய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுபற்றி தலித் சங்கர்ஷ சமிதி தலைவர் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், “தலித் சாதிகளை சித்தராமையா பிரிக்கிறார். எங்களின் நலன்களை அவர் புறக்கணிக்கிறார். தலித் சாதிகள் அனைத்தும் ஒன்றுசேரவும், எங்களுக்குரிய பலன்களை பெறவும் நாங்கள் 45 ஆண்டுகள் கஷ்டப்பட்டோம். ஆனால் தலித் மக்களை மேம்படுத்த நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை சித்தராமையா தடுக்கிறார். தலித் மக்களின் உதவியுடன் தான் சித்தராமையா ஆட்சிக்கு வந்தார். இன்று அவர் அந்த மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்“ என்றார்.
வக்கீல் ஆலோசனை
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாரச்சந்திரா முனியப்பா கூறும்போது, “சதாசிவா அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசு வக்கீலின் ஆலோசனையை கேட்டு இருப்பதாக சித்தராமையா சொல்கிறார். இதற்கு வக்கீல் ஆலோசனை தேவை இல்லை. தலித் சாதிகளை அந்த சதாசிவா ஆணையம் 4 வகையாக பிரித்துள்ளது“ என்றார்.