பெங்களூருவில் ‘பரிவர்த்தனா’ யாத்திரை நிறைவு விழா பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசுகிறார்
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ‘பரிவர்த்தனா’ யாத்திரை நிறைவுவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு,
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ‘பரிவர்த்தனா’ யாத்திரை நிறைவுவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது.
‘பரிவர்த்தனா’ யாத்திரை
இதையொட்டி சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக பா.ஜனதா சார்பில் ‘பரிவர்த்தனா’ யாத்திரையை அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி பெங்களூருவில் தொடங்கினார். இதை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அந்த கூட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால் பா.ஜனதா இக்கட்டான நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
எடியூரப்பா ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களை சந்தித்து பேசி இருக்கிறார். அவர் சுமார் 75 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். இந்த ‘பரிவர்த்தனா’ யாத்திரை பயணத்தின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணியளவில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
பலத்த பாதுகாப்பு
இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரிகள் அனந்தகுமார், பியூஸ்கோயல், பிரகாஷ் ஜவடேகர், சதானந்தகவுடா, அனந்தகுமார் ஹெக்டே, ரமேஷ் ஜிகஜினாகி, மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் அமர 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
அரண்மனை மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் பெங்களூருவில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொண்டர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பிரமாண்ட பொதுக்கூட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமையும் என்று பா.ஜனதா நிர்வாகிகள் கூறுகிறார்கள். மோடி பங்கேற்கும் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் கர்நாடக பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. மோடியின் வருகை கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
மோடி வந்து சென்ற பிறகு பா.ஜனதாவினர் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மோடி கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக மோடியின் பிரசார பயண திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை போல் கர்நாடகத்திலும் மோடியின் அலை வீசுமா? பா.ஜனதாவுக்கு வெற்றியை தேடித்தருமா? என்பதை தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.