வி.சாத்தப்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்–சிதம்பரம் சாலை ஓரமாக புதிதாக பரவனாறு அமைக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-02-03 21:15 GMT

விருத்தாசலம்,

கம்மாபுரம் அருகே என்.எல்.சி. சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேறும் சுரங்க நீர் அப்பகுதியில் உள்ள பரவனாறு வழியாக சென்றது. சுரங்க விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால் விருத்தாசலம்–சிதம்பரம் சாலை ஓரமாக புதிதாக பரவனாறு அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வி.சாத்தப்பாடி, அகரம், கத்தாழை, தர்மநல்லூர், வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் சாலை ஓரத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள விவசாயிகளின் நிலத்தை அவர்களுக்கு தெரியாமல் சிட்டா, பட்டாவை விவசாயிகளின் உரிய அனுமதியின்றி நிர்வாக அதிகாரி, பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரில் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த விவசாயிகள் நேற்று வி.சாத்தப்பாடியில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்