வேலூர் காட்பாடி ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
வேலூர் காட்பாடி ரோட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் நகரின் முக்கிய சாலைகளாக உள்ள ஆற்காடு ரோடு, காட்பாடி ரோடு மற்றும் அண்ணாசாலை ஆகிய சாலைகள் போக்குவரத்து மிகுந்த சாலைகளாகும். இந்த சாலைகளில் சி.எம்.சி. மெயின் கேட் மற்றும் காட்பாடி ரோட்டில் உள்ள வெளிக்கேட் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதே போன்று அண்ணா சாலையிலும் சில நேரங்களில் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் காட்பாடி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழைய நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து காமராஜர் சிலை சந்திப்பு வரையிலும், மண்டித் தெருவிலும் ‘திடீர்’ என போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. ஆட்டோக்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தியதால் இந்த நெரிசல் ஏற்பட்டது.
இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருந்தாலும் அந்தப்பகுதிக்கு போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் யாரும் வரவில்லை. இதனால் நீண்டநேரமாக நெரிசல் குறையவில்லை.
இந்த போக்குவரத்து நெரிசலில் வெளிமாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஒருவரின் காரும் சிக்கிக்கொண்டது. நீண்ட நேரமாகியும் நெரிசல் சரி செய்யப்படாததால் நீதிபதியின் பாதுகாப்புக்கு வந்த போலீசாரே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் சீரானது. அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நெரிசலில் சிக்கித்தவித்த வாகனங்கள் ஊர்ந்து செல்லத்தொடங்கின.