கொடைக்கானல் அருகே போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கொடைக்கானல் அருகே குடிநீர் குழாயை சேதப்படுத்தியதாக 2 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.;
கொடைக்கானல்,
கொடைக்கானல் தாலுகா, வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மிஸ்டி மவுன் டெய்ன் பகுதிக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிணற்றை சீரமைக்க மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். ஆனால் இந்த கிணற்றில் இருந்து அண்ணா ராமசாமி நகர் மற்றும் பாக்கியபுரம் பகுதியில் உள்ள 350 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்க வேண்டும். கிணற்றில் இருந்து தனியார் விடுதிகளுக்கு குடிநீர் வழங்க கூடாது என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி இத்திட்டத்தினை செயல்படுத்த வந்த அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அதிகாரி மகேந்திரன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அண்ணா ராமசாமி நகர் மிஸ்டி மவுண்டன் பகுதியில் கிணற்றை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டது இதற்காக குழுவின் தலைவருக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்த வேலையை செய்ய விடாமல் தடுத்து, குடிநீர் குழாய்களை உடைத்த மாரியப்பன், அப்பாஸ், ராபர்ட், ராஜன், ஜோசப், ரகு, முருகன், மாயன் ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் ஒரு நாள் மிஸ்டன் மவுண்டன் பகுதிக்கும், ஒரு நாள் அண்ணா ராமசாமி நகர் பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வட்டார வளர்ச்சி அதிகாரியின் புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் திடீரென்று வழக்குப்பதிவு செய்து மாயன், ரகு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட 2 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காமல் தடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், தாசில்தார் பாஸ்யம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வில்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் கிணற்றினை ஆழப்படுத்தி தொட்டி அமைத்து இரண்டு பகுதிகளுக்கும் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்தவர்களை விடுவித்து, அவர்கள் மீது தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.