திருப்பூரில் தீ விபத்தில் 11 வீடுகள் எரிந்து நாசம், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
திருப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 வீடுகள் எரிந்து நாசமானது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மின்மயானம் ரோடு அருகில் உள்ள சேர்மன் கந்தசாமி நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் 8 ஆஸ்பெட்டாஸ் போட்ட வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். இதை ஒட்டியபடியே அதே பகுதியை சேர்ந்த கிரி என்பவரும் சொந்தமான 3 வீடுகளும் இருந்தன. இந்த வீடுகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு தங்கியிருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் குடியிருந்த தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர். வீடுகளில் யாரும் இல்லாத நிலையில் மாலை 6 மணி அளவில் அதில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
சிறிது நேரத்தில் அந்த வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் வீட்டின் உள்ளே இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்து சிதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள ஏராளமானோர் அங்கு திரண்டனர். தொடர்ந்து தீ அந்த பகுதியில் உள்ள பிற வீடுகளிலும் பரவ ஆரம்பித்தது. அப்போது மற்றொரு வீட்டின் உள்ளே இருந்த மற்றொரு கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதைப்பார்த்த அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீ பரவாமல் இருக்க அதை அணைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து தீயின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து பொதுமக்கள் உடனடியாக வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 30 நிமிடங்கள் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனால், அதற்குள் அந்த பகுதியில் இருந்த வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. அப்போது, எரிந்த வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரில் இருந்தும் கேஸ் வெளியாகி கொண்டு இருந்தது.
உடனடியாக சுதாரித்து கொண்ட தீயணைப்பு படை வீரர்கள் அந்த சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வெடித்து சிதறிய சிலிண்டரின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. வீடுகளில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் 11 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. மேலும் 2 மோட்டார்சைக்கிள்கள், வீட்டு உபயோக பொருட்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் மட்டுமின்றி ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் தீயில் எரிந்தன. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் இந்த வீடுகளுக்கு தீவைத்தார்களா? என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.