முத்துப்பேட்டை பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது 95 மதுபாட்டில்கள் பறிமுதல்

முத்துப்பேட்டை பகுதியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 95 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.;

Update: 2018-02-03 22:15 GMT
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மதுவிற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தில்லைவிளாகம் மேலக்காட்டை சேர்ந்த நாகப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 25) என்பதும், மதுக்கடையில் இருந்து மதுபாட்டில் வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 78 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

இதேபோல இடும்பவானம் கடைத்தெரு அருகில் தென்னந்தோப்பில் ஒரு கொட்டகைக்குள் மது விற்கப்படுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு மதுவிற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், இடும்பாவனம் மானியம் பகுதியை சேர்ந்த பிச்சையன் (வயது 30) என்பதும், அனுமதியின்றி மது விற்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சையனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்