இந்தியா முழுவதும் ராஜஸ்தான் இடைத்தேர்தல் வெற்றி எதிரொலிக்கும் வசந்தகுமார் எம்.எல்.ஏ பேட்டி
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற இடைத்தேர்தல் வெற்றி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
நாமக்கல்,
காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என மாத சம்பளம் வாங்குவோர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதேபோல் 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான தொகையை அரசே செலுத்துமா? இல்லை பங்கு தொகையாக பொதுமக்களிடம் வசூலிக்கப்படுமா? என்பதை விளக்க வேண்டும்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினர். ஆனால் அவ்வாறு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தியாவில் 60 சதவீதம் படிக்காதவர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் மீண்டும், மீண்டும் மத்திய அரசு தோல்வி அடைந்த திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வலியுறுத்தி வருகிறது. இந்த பட்ஜெட் வருவாய் குறைவு, செலவினம் அதிகம் என்ற வகையில் துண்டு பட்ஜெட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் வெற்றி
இதுபோன்ற காரணங்களால் பா.ஜனதா அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதற்கு முத்தாய்ப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது. தொடர்ந்து இந்த வெற்றி இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார்.
தமிழகத்திலும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இங்கும் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் இங்கு எந்த திட்டமும் இல்லை. கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் சிறு தொழில்கள் நலிவடைந்து வருகிறது.
பாதிப்பு இல்லை
நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நெல்லையில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு என வெளியான செய்தியில் உண்மை இல்லை. கட்சி நிர்வாகி அலுவலகத்தை பூட்டி விட்டு சாப்பாட்டுக்கு சென்றபோது, அதை படம் பிடித்து மிகைப்படுத்தி விட்டனர். காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் அழைத்தால், நாங்கள் கர்நாடகா சென்று அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
தொடர்ந்து அவர் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட தலைவர் ஷேக்நவீத், முன்னாள் தலைவர் செழியன், பொதுக்குழு உறுப்பினர் சித்திக், நகர தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சேலம், நாமக்கல் மண்டல ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் அமைப்பாளர் ஜி.ஆர்.சுப்பிரமணியன் அவருக்கு சால்வை அணிவித்தார்.