தேனியில் ஒரே நாளில் சேதம் அடைந்த சாலை, பொதுமக்கள் அதிருப்தி
தேனி-மதுரை சாலையை சீரமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தேனி,
தேனி-மதுரை சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கு வரை உள்ள சாலையின் ஒரு பகுதியை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இந்த சாலையில் மையத் தடுப்புச்சுவர் அமைந்துள்ள ஒரு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அமைக்கப்பட்ட சாலை நேற்று காலையில் சேதம் அடைந்து காணப்பட்டது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடந்தன. கற்களை பரப்பி விட்டதை போல் சாலை காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் நடந்த நிலையில், சாலையில் பெயர்ந்து வந்த ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். எனவே, இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.