புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
புதுக்கோட்டையில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் ன மாதாந்திர உதவித்தொகை கோரி 66 மனுக்கள், இலவச வீடு மற்றும் வீட்டு மனை கோரி 26 மனுக்கள், கடனுதவி கோரி 51 மனுக்கள், பராமரிப்பு உதவித்தொகை கோரி 5 மனுக்கள், உதவி உபகரணங்கள் கோரி 12 மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 177 மனுக்களை பெறப்பட்டது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
நிலவேம்பு கசாயம்
முன்னதாக கூட்டத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்்திறனாளிகள் கூட்ட நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்காக சைகை மொழி பெயர்ப்பாளரை கொண்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. கூட்டத்தில் நடைபெற்ற சித்த மருத்துவத்திற்கான சிறப்பு மருத்துவ முகாமில் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும், 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, தனித்துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சரவணகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.