தாராபுரத்தில் மேலும் 4 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்; விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
தாராபுரத்தில் நேற்று மேலும் 4 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி விடுதிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினார்கள்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே தெக்காலூரில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இருந்த ஆசிரியை உள்பட 13 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அதையடுத்து ஆசிரியை உள்பட 9 மாணவிகள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 4 மாணவிகள் தாராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும், தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள், வட்டார பொது சுகாதாரத்துறை மருத்துவர் தேன்மொழி மற்றும் மருத்துவக் குழுவினர் கல்லூரி விடுதியில் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது மாணவிகளுக்கு வழங்கப்படும் குடிநீர், உணவு பொருட்களின் தரம், சமையல் கூடத்தின் சுகாதாரம் போன்றவை உணவு பாதுகாப்பு துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது.
மருத்துவ குழுவினர் விடுதியில் இருந்த மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:- விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் சிலருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் ஆய்வு நடத்தினோம். மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரில் ஏதேனும் கலந்துள்ளதா? என்பதை கண்டறிவதற்காக, மாணவிகளுக்காக சமைக்கப்படும், உணவு பொருட்களையும், குடிநீரையும் சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். பரிசோதனைக்குப் பிறகுதான் மாணவிகளுக்கு பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தெரியவரும்.
மருத்துவ குழுவினர் விடுதியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். மேலும் மாணவிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.