கோவை அருகே லாரியில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி
கோவை அருகே லாரியில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். படுகாயம் அடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போத்தனூர்,
விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் கார்த்திக் (வயது 21). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் அறை எடுத்து தங்கி, ஈச்சனாரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விழுப்புரத்தில் இருந்து இவருடைய உறவினர்களான கல்லூரி மாணவர்கள் சரவணன் (21), அஸ்வின் (19) ஆகியோர் கோவை சூலூருக்கு வந்தனர். அவர்களை கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள தனது அறைக்கு சென்றுகொண்டிருந்தார். இவர்களுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கார்த்திக் கின் நண்பர்களான என்ஜினீயரிங் மாணவர்கள் திருச்சியை சேர்ந்த குல்சான் (21), ராமநாதபுரத்தை சேர்ந்த முனீஸ் (22), நாகபட்டினத்தை சேர்ந்த இம்மானுவேல் (22) ஆகியோரும் சென்றனர்.
இவர்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் செட்டிபாளையம் அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோடு கல்லாகுத்து தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி இரும்புத்தகடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரியை கார்த்திக் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது சேலத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி எதிரே வந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக், அவருடைய உறவினர்களான சரவணன், அஸ்வின் ஆகியோர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் கியாஸ் சிலிண் டர்களை ஏற்றி வந்த லாரி டிரைவர் லாரியை வலது பக்கமாக திருப்பினார். அப்போது இரும்பு தகடுகளை ஏற்றிவந்த லாரி மீது கியாஸ் சிலிண்டர் லாரி மோதியது.
அந்த நேரத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த குல்சான், முனீஸ், இம்மானுவேல் ஆகியோர் இரும்புத்தகடுகளை ஏற்றிவந்த லாரியின் பின்னால் மோதி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரியின் டிரைவர் கோவிந்தராஜ் (66) படுகாயம் அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் செட்டிபாளையம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த லாரி டிரைவர் உள்பட 4 பேரையும் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான மாணவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ‘இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும். ஒரு வாகனத்தை முந்திசெல்லும்போது எதிரே வாகனங்கள் எதுவும் வருகிறதா? என்று பார்த்து முந்தி செல்ல வேண்டும்’ என்றனர்.