மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து நாசம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து நாசமாயின. சுவாமி சன்னதி செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்து பக்தர்களை கலங்கடித்து விட்டது.
மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன. இந்த கடைகளில் பூஜைக்கு தேவையான பூஜை பொருட்கள், குங்குமம், விபூதி, சுவாமி சிலைகள், வளையல்கள், பொம்மைகள், துணிகளால் ஆன கலைப் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. சுமார் 10.30 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து புகை வருவதை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர்.
உடனே அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். கோவிலின் வெளியே மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் அங்குள்ள கடைகளில் தீ பரவி எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்குள் சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்க முயன்றும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
உடனே அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
விபத்து குறித்து அறிந்ததும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணை கமிஷனர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களுடன் அனைவரும் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் அந்த பகுதியில் உள்ள 36 கடைகள் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாயின. தீ விபத்து காரணமாக, கிழக்கு ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. நேற்று காலையிலும் அந்த பகுதியில் இருந்து புகை வந்து கொண்டே இருந்தது.
அதிக வெப்பம் காரணமாக வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கூரையின் குறுக்காக இருந்த சில கல் உத்திரங்களும் இடிந்து விழுந்து நொறுங்கின.
அந்த மண்டபம் அமைந்துள்ள பகுதி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் அடைத்து வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி ஆயிரங்கால் மண்டபமும் மூடப்பட்டு, அந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆனால் கோவிலில் சுந்தரேசுவரரையும், மீனாட்சி அம்மனையும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய நேற்று அனுமதிக்கப்பட்டது.
விபத்து காரணமாக நேற்று காலை கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதற்காக சுவாமி சன்னதி நந்திமண்டபத்தில் அஸ்தர ஹோமம் வளர்க்கப்பட்டு, சாந்தி பூஜை நடந்தது. பின்னர் ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மூலம் சுந்தரேசுவரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அந்த புனித நீரை கோவில் வளாகம் முழுவதும் பட்டர்கள் தெளித்து நிவர்த்தி செய்தனர்.
இது குறித்து கோவில் பட்டர் செந்தில் கூறும் போது, இங்கு ஏற்பட்டது விபத்து தான். தீ விபத்து காரணமாக கோவிலில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதனால் ஆட்சிக்கோ, கோவிலுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை. எனவே பக்தர்கள் பீதி அடைய வேண்டாம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். விபத்து நடந்த பகுதி சீரமைக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில் கோவிலுக்கு வெளியே இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி, பக்தர்கள் பாதுகாப்பு பேரவையினர் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிழக்கு சித்திரை வீதியில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.