வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி த.மா.கா. ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வாடிப்பட்டியில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-02-02 22:30 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி யூனியன் ஆபிஸ் பிரிவில் மதுரை-திண்டுக்கல் நகர்புறச்சாலையில் மதுரை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பட்டம் நடந்தது. இதில் பஸ் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்.

கரும்பு நிலுவை தொகை, காப்பீடுத்தொகையை தாமதபடுத்தாமல் வழங்க வேண்டும். கரும்பு, நெல் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பாலசரவணன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் கச்சைகட்டி பாண்டி வரவேற்றார். மாநில செயலாளர் ஜெயஸ்ரீசீமான் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்பாட்டத்தில் மாநில செயலாளர் செண்பகநாதன் உள்பட மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை மேலிடபார்வையாளர்கள் முடித்து வைத்து பேசினர். முடிவில் முத்துகாமாட்சி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்