பாம்பன் ரெயில் பாலத்தில் ரூ.35 கோடியில் புதிய தூக்குப்பாலம்
பாம்பன் ரெயில் பாலத்தில் ரூ.35 கோடி செலவில் புதிய தூக்குப்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளன.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை, பாம்பன் ரெயில் பாலமும், ரோடு பாலமும் தான்.
அதிலும், ரோடு பாலத்திற்கு முன்னதாகவே அமைக்கப்பட்டு விட்ட ரெயில் பாலம் அதிமுக்கியத்தவம் பெறுகிறது. 103 ஆண்டுகளை கடந்து விட்ட இந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள், பெரிய படகுகள் கடந்து செல்லும் வகையில் மனித சக்தியால் இயங்கும் தூக்குப்பாலம் உள்ளது.
இந்த தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு நீண்டகாலமாகி விட்டதாலும், அதனை இயக்குவதில் சிரமம் இருந்து வருவதாலும் அங்கு மின் மோட்டார் மூலம் இயங்கும் புதிய தூக்குப்பாலத்தை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து புதிய தூக்குப்பாலம் அமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ரெயில்வே துறையின் முதன்மை பொறியாளர்கள் இந்த பாலத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக வந்தனர்.
அவர்கள் ‘ஹெலிகாம்‘ கேமராவை பறக்கவிட்டு, பாலத்தை முழுமையாக படம் பிடித்தனர்.இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்தியாவில் கடல், ஆறு ஆகியவற்றில் உள்ள பாலங்களை ஆய்வு செய்து அவற்றின் உறுதித்தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு ரெயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பாம்பன் தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு வருகிற ஜூன் மாதம் புதிய தூக்குப்பாலம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கும். இந்த பணிகள் ஆர்.வி.என்.எல். மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. மாதிரி தூக்குப் பால வடிவமைப்பு, பிரெஞ்சு, ஸ்பெயின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கி 3 மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பணிகளின் போது ராமேசுவரத்துக்கு வரும் அனைத்து ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும்.
புதிய தூக்குப்பாலம் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் நிறுவப்படும். இதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் மத்திய அரசிடம் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரம் தீவுப் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெலிகாம் கேமரா பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தின் மீது ஹெலிகேமரா பறந்ததை தொடர்ந்து உளவுத்துறையினர் விரைந்து வந்து ரெயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தனர். அப்போது முறையான அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் பதில் அளித்தனர்.