பவானி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பவானி அருகே மது குடிக்க பணம் தராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-01 23:31 GMT
பவானி,

பவானி அருகே உள்ள சின்னமோளபாளையம் மணிகண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 65). அவருடைய மனைவி அலமேலு. இவர்கள் 2பேரும் கூலி வேலைக்கு சென்று வந்தார்கள். அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அலமேலு நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த அய்யப்பன் மனைவியிடம், ‘மது குடிக்க பணம் வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘இப்போதுதான் வேலைக்கு சென்றுவிட்டு வந்திருக்கிறேன். சோர்வாக இருக்கிறது. மது குடிக்க பணம் கேட்டு என்னை தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் அய்யப்பன் மனம் உடைந்து காணப்பட்டார். அதன்பின்னர் அவர் தூங்க சென்றுவிட்டார். இந்த நிலையில் அய்யப்பன், வீடு அருகே ஓரிடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்