சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் 2-வது நாள் தேரோட்டம்
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தேர் திருவிழாவையொட்டி 2-வது நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. பக்தர்கள் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூசத்தேர் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 22-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு சுப்பிரமணியசாமி-வள்ளி- தெய்வானையுடன் ரதத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேர்வடம் பிடிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களால் தேர் இழுத்து செல்லப்பட்டு தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர்.
2-வது நாளாக நேற்றுமாலை 4 மணிக்கு மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையின் வடக்கு பகுதியில் மாலை 6 மணிக்கு தேர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு நிலையை அடையும்.
நேற்றுகாலை முதல் பல்வேறு கிராமங்களில் இருந்து காவடி எடுத்துச்செல்லும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். குறிப்பாக சில காவடிக்குழுவினர் காளைகளுடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊதியூர் அருகேயுள்ள தீத்தாம்வலசை சேர்ந்த காவடி குழுவினர் பல ஆண்டுகளாக காவடி எடுத்து வருகின்றனர். மேலும் காவடி குழுவினர் சிவன்மலை கவுண்டர் என்பவரின் காளை பக்தர்கள் குத்திய ரூபாய் நோட்டுகளுடன் கிரிவலப்பாதையை சுற்றி வந்தது. பின்னர் காளையுடன் மலையேறிச்சென்று சுப்பிரமணியசாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதேபோல காங்கேயம் அருகேயுள்ள வீரணம்பாளையம், கத்தாங்கண்ணி உள்ளிட்ட சில காவடி குழுவினரும் காளையுடன் காவடி எடுத்துச்சென்றனர். மலையை சுற்றி அடிவாரப்பகுதியில் நேற்று ஏராளமான காவடி குழுவினரின் சார்பில் பல இடங்களில் கூடாரங்கள் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திருப்பூர், தாராபுரம், வெள்ளகோவில், கோவை, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நேற்றும் சிறப்பு பஸ்கள் சிவன்மலைக்கு இயக்கப்பட்டது. இதனால் காங்கேயம் பஸ் நிலையத்தில் இருந்து சிவன்மலை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி இருந்தனர்.