குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாவு
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாவு கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹக்கீம் (வயது 54). இவர் தனது குடும்பத்துடன் அவினாசியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வந்தார். தற்போது காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை தைப்பூச தேரோட்ட திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்கு திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் வருவதால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் ஏராளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஹக்கீமும் சிவன்மலை கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணியில் வரவழைக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து ஹக்கீம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.