மணல் கடத்திய 5 பேர் கைது

மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-02-01 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த மேல்பெரமநல்லூர் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அந்த பகுதிக்கு மாகரல் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி மேல்பெரமநல்லூரை சேர்ந்த சீனிவாசன் (வயது 26), வேடல் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (26), ஜெயக்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஆட்டோ நகர் பகுதியில் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தார். அப்போது அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதையொட்டி ஓச்சேரி தர்மநிதி கிராமத்தை சேர்ந்த விஜி (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்