கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காய்கறி வியாபாரி தீக்குளிக்க முயற்சி
புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காய்கறி வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையம் சார்பில் மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வரும் காஜா உசேன் (வயது 51) என்பவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென்று ஒரு பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்ட பொதுமக்கள், போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் அங்கு ஒரு குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றினர். இதனை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்த சென்றனர். பின்னர் அவர் கூறியதாவது:-
நான் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். எனது வீட்டு முன்பு சிலர் ஆட்டோக்களை நிறுத்தி வைத்து இருந்தனர். நான் அவர்களிடம் ஆட்டோவை இங்கு நிறுத்த வேண்டாம் என்று கூறினேன். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் ஆட்டோக்களை அங்கு நிறுத்தி வந்தனர். இந்த நிலையில் நான் அங்கு ஒரு தள்ளு வண்டியை நிறுத்தி வைத்தேன்.
இதன் காரணமாக ஆட்டோ டிரைவர்களுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் எனது தள்ளுவண்டியை சிலர் சேதப்படுத்தி விட்டனர். இது குறித்து நான் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மன வேதனை அடைந்த நான் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முடிவு செய்து வந்தேன்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காய்கறி வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.