கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி சமூக வலைத்தளங்களில் பதிவு: உதவி செய்வதாக கூறி தனியார் நிறுவன பெண் ஊழியர் கற்பழிப்பு
தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் உதவி செய்வதாக கூறி அவரை ஏமாற்றி கத்திமுனையில் கற்பழித்த நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் உதவி செய்வதாக கூறி அவரை ஏமாற்றி கத்திமுனையில் கற்பழித்த நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
கணவர் மாயம்
பெங்களூருவில் வசித்து வருபவர் 26 வயது பெண். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சமீபத்தில் மாயமானார். மாயமான கணவரை அவர் தீவிரமாக தேடிவருகிறார். இந்த நிலையில், தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இதை மனோஜ் மஞ்சு என்பவர் பார்த்துள்ளார். அவர் பெண் ஊழியரை தொடர்பு கொண்டு மாயமான கணவரை கண்டுப்பிடித்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதை அந்த பெண்ணும் நம்பியுள்ளார். மேலும், தனது கணவரை கண்டுபிடித்து கொடுப்பதற்கு வசதியாக ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போன் ஒன்றை பெண் ஊழியர் மனோஜ் மஞ்சுவிடம் கொடுத்துள்ளார்.
கத்தியை காட்டி மிரட்டி...
சம்பவத்தன்று, மாயமான கணவரை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக மாரத்தஹள்ளி வரும்படி மனோஜ் மஞ்சு, பெண் ஊழியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரும் தனது ஸ்கூட்டரில் மாரத்தஹள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், அவரை மனோஜ் மஞ்சு அருகே உள்ள தைலமரத்தோப்புக்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் மாரத்தஹள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் மனோஜ் மஞ்சு, தனியார் நிறுவன பெண் ஊழியர் கணவரின் நண்பர் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மனோஜ் மஞ்சுவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.