போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி,
சென்னை போரூர் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 35). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டுக்கு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்று விட்டார். இரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.