ரெயில்கள் 3 மணிநேரம் தாமதம் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வெஸ்ட்கோட்ஸ் உள்பட ரெயில்கள் 3 மணிநேரம் தாமதம் திருப்பத்தூரில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு சென்னை – மங்களூரு வெஸ்ட்கோட்ஸ் விரைவு ரெயில் தினமும் மதியம் 3–17 மணிக்கு வர வேண்டும். அதேபோல் மறு மார்க்கத்தில் இருந்து மங்களூரு – சென்னை விரைவு ரெயில் திருப்பத்தூருக்கு காலை 10–45 மணிக்கு வர வேண்டும்.
ஆனால் தினமும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 2 ரெயில்களும் 2.30 மணி நேரம் முதல் 3 மணி நேரம் தாமதமாக வருவதால் ரெயில் பணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பணிக்கு நேரத்திற்கு செல்ல முடியவில்லை என்று திருப்பத்தூர் ரெயில் பணிகள் நலச்சங்கம் சார்பில், திருப்பத்தூர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் எஸ்.ராமானுஜம் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் சுரேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆர்.ஜி.வெங்கடாசலம் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சரியான நேரத்திற்கு ரெயில்களை இயக்க கோரியும், ரெயில் நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் ஆனந்தகிருஷ்ணன், ஜூபேர்அகமத், அனைத்து வணிகர் சங்க தலைவர் சி.மணி உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ரெயில் பயணிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயலாளர் ஜி.சண்முகா நன்றி கூறினார். பின்னர் ரெயில்வே மேலாளர் நாயக்கிடம் மனு அளிக்கப்பட்டது.