மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.29½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ராயபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.29½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2018-02-01 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ராயபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி தன சேகரன் தலைமை தாங்கினார். அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனராஜன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

விழாவில், வருவாய்த்துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டு மனை பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டு மனைப்பட்டாக்களையும், 6 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு இறப்பு சான்றிதழ்களும், 20 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ் களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 150 மதிப்பில் நவீன செயற்கை கால்களும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு பவர் டில்லர் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களையும், கூட்டுறவு சங்கம் சார்பில் 6 மகளிர் சுயஉதவிக் குழுக் களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளையும் என ஆக மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 41 ஆயிரத்து 659 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், திருமானூர் ஒன்றியம், சாத்தமங்கலம் கிராமத்தில் சமீபத்தில் சமையல் எரிவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட 3 வீடுகளுக்கும், முதல்- அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டுவதற்கான ஆணைகளையும் அரசு தலைமை கொறடா வழங்கினார்.

இதில் துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, துணைப்பதிவாளர் (பொதுவினியோகத்திட்டம்) செல்வராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளஆதாரம்) தெய்வீகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ, ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயராணி, வட்டாட்சியர் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வேளாண்மைத்துறை, வேளாண்பொறியியல் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில், வருவாய் ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்