தினகரன் அணி விளம்பரம் அழிப்பு ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு
கரூர் வெங்கமேட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் தினகரன் அணி சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பாக சுவர் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த சுவர் விளம்பரத்திற்கு நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வில்லை என்று போலீசார் கூறியதால் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் டி.டி.வி.தினகரன் அணியினர் எழுதியிருந்த சுவர் விளம்பரத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுவரில் எழுதப்பட்ட வாசகங்களை தொழிலாளர்கள் அழித்து கொண்டிருந்தனர்.
வாக்குவாதம்
இதற்கிடையே தங்களுடைய சுவர் விளம்பரம் மட்டும் அழிக்கப்படுவதாக கூறி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ், வாங்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம், தங்களுடைய சுவர் விளம்பரத்தை அழிக்கக்கூடாது என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூறினர்.
அதற்கு நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் முத்துசாமி கூறுகையில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுவர்களில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுகிறது, என்றார். அப்படியானால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் எழுதிய சுவர் விளம்பரங்களையும் அழிக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடமும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுவர்களில் எழுதப்பட்ட அனைவருடைய விளம்பரமும் அழிக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.
பரபரப்பு
அனைத்து இடங்களிலும் தங்களது சுவர் விளம்பரம் மட்டும் அழிக்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து சுவர் விளம்பரத்தை அழிக்கும் பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். திருமாநிலையூரில் நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் எழுதப்பட்டிருந்த அ.தி.மு.க. சுவர் விளம்பரத்தையும் தொழிலாளர்கள் நேற்று அழித்தனர்.