மதுரை-தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

மதுரை- தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.;

Update: 2018-02-01 20:30 GMT
கோவில்பட்டி,

மதுரை- தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்


மதுரை- தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தலைமை தாங்கினார். ரெயில்வே ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற மாவட்ட கலெக்டருமான இளங்கோ முன்னிலை வகித்தார்.

மண்டல துணை தாசில்தார் நாகராஜன், வருவாய் ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் மற்றும் கோவில்பட்டி, இலுப்பையூரணி, இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி, நாலாட்டின்புத்தூர், ஊத்துப்பட்டி, மந்திதோப்பு, இடைசெவல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இழப்பீட்டு தொகை

கூட்டத்தில் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் பேசுகையில், இரட்டை ரெயில்பாதை அமைக்க நிலம் வழங்குகிறவர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் தொகை வழங்கப்படும். நிலம் கையகப்படுத்தும் இடத்தில் கட்டிடங்கள் இருந்தால், அதனை பொதுப்பணித்துறையினர் மூலம் கணக்கீடு செய்து, அதற்கான உரிய இழப்பீட்டு தொகை, நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

இரட்டை ரெயில் பாதை அமைக்க நிலம் வழங்க நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்