தர்மபுரியில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோவில் தேரோட்டம்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம் பிடித்த முருகன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
தர்மபுரி,
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும், விநாயகர் தேரோட்டமும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவசுப்பிரமணியசுவாமி தேரோட்டம் நேற்று நடந்தது. இந்த தேரோட்டத்தில் பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை தேரோட்டம் தொடங்கியதும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் முருகனுக்கு “அரோகரா, கந்தனுக்கு அரோகரா” என்று பக்தி கோஷங் களை எழுப்பினார்கள். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.
அதைத்தொடர்ந்து மாலை வாண வேடிக்கை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பாரிமுனை நண்பர்கள், வாரியார் அன்னதான அறக்கட்டளை மற்றும் ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில், பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) பிச்சாண்டவர் உற்சவம் மற்றும் குதிரை வாகன உற்சவமும், நாளை (சனிக்கிழமை) விழாக்கொடி இறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், 4-ந் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, செயல் அலுவலர் முருகன், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.