ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுற்றுச்சூழல் என்ஜினீயர் கைது
கல்குவாரி நடத்த அனுமதி வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுற்றுச்சூழல் என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் முரளிதரன். இவர் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை அருகே பூலாஞ்சேரியில் உள்ள தனது சொந்த நிலத்தில் கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி துவாக்குடியில் உள்ள மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.
ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முரளிதரன் சென்னையில் உள்ள மாசுகட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
சென்னை மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் இருந்து மீண்டும் திருச்சியில் உள்ள அலுவலகத்திலேயே விண்ணப்பம் செய்து அனுமதி வாங்கி கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முரளிதரன் கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு திருச்சி மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பம் செய்தார். அப்போது திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரெங்கசாமி (வயது 57) தனக்கு ரூ.1½ லட்சம் லஞ்சமாக தந்தால் தான் அனுமதி வழங்குவதற்கான பணிகளை செய்ய முடியும் என்றார். அதற்கு முரளிதரன் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தருகிறேன், பின்னர் மீதி தொகையை தருகிறேன் என கூறினார்.
பின்னர் இதுபற்றி முரளிதரன் திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீஸ் படையினர் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரெங்கசாமியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி முரளிதரனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டு அதனை ரெங்கசாமியிடம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
லஞ்சப்பணத்தை திருவானைக்காவலில் தனது வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரும்படி முரளிதரனிடம் ரெங்கசாமி ஏற்கனவே கூறி இருந்தார். இதன்படி ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுப்பதற்காக நேற்று காலை 8 மணி அளவில் முரளிதரன் என்ஜினீயர் ரெங்கசாமியின் வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றார்.
அதற்கு முன்னதாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு பதுங்கி இருந்தனர். முரளிதரன், ரெங்கசாமியிடம் பணத்தை கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையோடு பிடித்து கைது செய்தனர். ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் என்ஜினீயர் ரெங்கசாமியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள்.
ரெங்கசாமியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.