பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், பஸ்களின் தரத்தை மேம்படுத்தக் கோரியும் தமிழக இந்து மக்கள் கட்சியின் குமரி மாவட்ட இளைஞரணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-02-01 22:30 GMT
நாகர்கோவில்,

தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், பஸ்களின் தரத்தை மேம்படுத்தக் கோரியும் தமிழக இந்து மக்கள் கட்சியின் குமரி மாவட்ட இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நடராஜபிள்ளை வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் ரவிகுமார், மாநில துணைத்தலைவர் குணசீலன், பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா, இளைஞரணி மாநில செயலாளர் செல்வசுந்தர்சிங் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் நிர்வாகிகள் ஸ்ரீசுடர், செந்தில், சிவசங்கர், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்