மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியானவரை நியமிக்க 2 நாள் அவகாசம், மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வேண்டுகோள்
மருத்துவக் கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியானவரை நியமிக்க 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மதுரை,
தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கரூர் மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி கயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின்ஜோ நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில், மருத்துவக்கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பான அரசாணையையும், தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் அந்தப் பதவிக்கு தகுதியான நபரை 6 வாரத்தில் பரிசீலித்து நியமிக்கவும் டிவிஷன் பெஞ்ச் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கு காரணமான சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ரேவதி கயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு வக்கீல், மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை தயார் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளது. அந்த பட்டியல் மீது முடிவு எடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “மருத்துவக்கல்வி இயக்குனரை பதவி இறக்கம் செய்ய வைத்தது தொடர்பாக எனது கட்சிக்காரருக்கு பல்வேறு வகையில் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.